Sunday, November 4, 2012

தேடல்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal kavithaigal



தேடல்-------------
அன்பே !! நீ என்னுடன்
  இல்லா ஒவ்வொரு
  
தருணமும் நானோ
  

தேடுகிறேன் உன்னை - என்னில்
  
நீ என்னுடன்
இருக்கும் ஒவ்வொரு
  
தருணமும் நானோ
  
தேடுகிறேன் என்னை - உன்னில்

Thursday, November 1, 2012

படித்ததால் தெரிந்து கொண்டது ---- அன்பை அடையாளங்காணல்

அன்பை அடையாளங்காணுதல் எப்படி? இப்படி !!! :)



”குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல

இதுகாண் அன்பு என்ரு போதத் திறந்து காட்டாலாகாது.

அன்புடையரான குணக்கண்டவிடத்து இவை உண்மையான

ஈங்கு அன்பு உண்டென்ரு அனுமித்துக் கொள்ளற்பாற்று!!

அன்புடையரான குணம் யாவையோ எனின்...


  • சாவிற் சாதல்
  • நோவின் நோதல்
  • ஒண்பொருள் கொடுத்தல்
  • நன்கினிது மொழிதல்
  • புணர்வு நனிவேட்டல்
  • பிரிவு நனியிரங்கல்
என இவை”   (இது அக்கால உரை நடை, இதுகாற் கொண்டு, இக்கால பொருள் படும் படி கீழ்காண்க)


பொருள் : 

 குடத்துள் விளக்கு, உரைக்குள் கத்தி போல.... இதுதான் அன்பு என்று அறியுமாரு திறந்து காட்ட முடியாது. அன்புள்ளவரின் 

குணங்களைப் பார்க்கும் போது இவை இருப்பதால் (உண்மையாய்) இங்கே அன்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியும். அன்புள்ளவரின் குணங்கள் என்னென்ன என்றால்..

  • சாவிற் சாதல்
  • நோவு வந்தால் வருத்தப் படுதல்
  • பொருள் உதவி செய்தல்
  •  நல்லதாய் இனிமையாய் பேசுதல்
  • சந்தித்தலை விரும்பல்
  • பிரிவில் வருந்தல்    
என்பனவாம்.”


(சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV பக் : 103)



படித்ததால் தெரிந்து கொண்டது - பாலிண்ட்ரோம்

தமிழில் காணக் கிடைக்கும் ஒரு பாலிண்ட்ரோம் (இதற்க்கான தமிழாக்கம் என்ன?) திருஞான சம்பந்தரால் எழுதப்பட்டதாக படித்ததில் தெரிந்து கொண்டது.


“யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா !”


பொருள் : சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருந்துமா? நீ ஒருவனே கடவுள் என்றால், பொருந்தும். ( சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV, பக் - 121)                                                    

உறக்கம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

உறக்கம் 
------------
உனக்காய் மட்டுமே
எனது உறக்கம்
தொலைக்கிறேன்!
அவ்வுறக்கம் உன்னையும்
சேர்தலில்லை கண்டு
உளம் சோர்கிறேன்
என்னுடன் உறங்க
விருப்பம் சொன்னாய் நீ!
உறங்காத எனது எண்ணம்
சொலேன் நான் !!!

சமன்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kadhal kavithaigal

சமன்
--------

உனது உதட்டோரப் புன்னகைக்கான

எனது காத்திருப்பின்

காரண காரியம்

சமனாகிறது

உனது புன்னகை

மலரும் அத்தருணத்திலேயே !!

Thursday, October 18, 2012

Points to Ponder !!!

"I do not care when u disturb me..But,
I get disturbed when u dont disturb me..!"

Monday, October 8, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்

கூப்பிடு தொலைவில் நீ

என்ன சொல்லிக்

கூப்பிடுவது என்ற

தயக்கத்தில் நான்.

தெரிந்துகொள்ளும் ஆசை

காதலாகிப் போனது.

                 ( நன்றி : இரா. சரவணன்)

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதைகள்

காத்திருந்து காத்திருந்து

சோர்கையில்

நீ வருவாய்

கோபப்படுவேன் நான்

வெட்கப்படத் தெரியாததால்.

காதல் தீபம்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal

காதல் தீபம்
----------------

விரும்பித்தான்

விழுகிறதோ

விட்டில் பூச்சியும்

தீபத்தில் !

காதலில் நானும்!!!

இன்றைய குறள் - ஊக்கம் உடைமை

 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வேருஉம் புலிதாக் குறின். - அதிகாரம் : ஊக்கம் உடைமை



பொருள் : யானை கனத்த உருவம் (உடம்பை) உடையது, கூர்மையான தந்தங்களை உடையது. ஆயினும், ஊக்கமுள்ளதாதிய புலி தாக்கினால் அதற்க்கு அஞ்சும்.


பொருள் விளக்கம் : ஆளு எவ்வளவு பெரிசா இல்லா சிறிசான்கிறது முக்கியமே இல்லை !!! ”புலி” மாதிரி ஆக்கமும் ஊக்கமும் எவ்வளவு பெரிசு, அது தான் பெரிசு!!!  தாவீதும் கோலியாத்துக் கதை தான்!!! அடிக்கிற இடத்துல அடிக்கிய வேண்டிய விதத்தில் அடிச்சா ஆனையும் அலறும்!!! 



சுற்று- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

சுற்று
---------

புவிக்கோர் சூரியன்

முழுமதிக்கோர் பூமி

எனக்கோ நீ !!!

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதை


இரும்பிலும்

பூக்கள் பூக்கும்

ஜன்னலில்

உன் முகம்.

      ( நன்றி : அந்நியன்)

துடிப்பு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal


துடிப்பு
========

உன்னருகே

இருக்கும் ஒவ்வொரு

தருணத்திலும் நான்

காந்தப் புலத்தில்

அகப்பட்ட

இருப்புத் துண்டாய்

துடிக்கிறேன்!

உனைச் சேர்தற்க்கே!!!

Saturday, October 6, 2012

வாழ்வு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

வாழ்வு
-----------

என்


உயிரிலும்

உணர்விலும்

நினைவிலும்

உறைந்து விட்டாய்

நீ!


நான்

உயிர்

வாழ்ந்ததும்

வாழ்வதும்

வாழ நினைப்பதும்

உன்னாலே !!

பெய்யெனப் பெய்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

பெய்யெனப் பெய்
-----------------------


சிறு மின்னல் கீற்றாய்

சிறு சிறு மழையாய்

துவங்கி

இடி மின்னலுடன் கூடிய

அடை மழையாய்

இடைவிடாமல்

பெய்யெனப் பெய்கிறாய் 

என்னில்

நீ !!

உயிர்மெய்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal

உயிர்மெய்
---------------


உயிர் காதல்

மெய் காமம்

காதலியே நாம் 

உயிர்மெய்யாவது

எப்போது!!!

Tuesday, September 25, 2012

உளறல்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

உளறல்
----------

எனது உளறல்கள்

அனைத்தையும்

அரிய கவிதை

என்கிறாய்!!!

கவிதைகளை

என்னவென்பாய்?

வித்தியாசம்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

வித்தியாசம்
-----------------

கடவுளுக்கும்

காதலியே உனக்கும்

கண்டேனே வித்தியாசம் !!

என் பார்வையில்

நீயோ எங்கும் !!

கடவுளோ?

இனிமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

இனிமை
------------

தோற்பதும்

இனிதாவது மனம் ஒத்த

காதலில் மட்டுமே!!!

முயற்சி - தமிழ் கவிதைகள் - Tamil kavithaigal

முயற்சி
------------

சிறகொடிந்த பறவையாய்

இருப்பதாய் நினைப்பதைவிட

மேலே மேலே

பறந்து பறந்து

சிறகொடிதல் அனைத்திலும்

மேலானது!!!

அனுமதி- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal


அனுமதி
------------

உன்னில் நான்

வேறூன்றியுள்ளதாய்

சொன்னாயே நீயன்று !!!

பின் ஏன் என்னை

உன் அநுதின வாழ்வில்

என்னொருயடிகூட

உள் நுழைய அனுமதி

மறுக்கிறாயே நீயோயின்று!!!

ஆக்கிரமிப்பு - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

ஆக்கிரமிப்பு
------------------

எண்ணை வளத்திற்க்காய்

நாடுகள் - சரி !!!

என்ன வளத்திற்க்காய்

என்னை நீ?

Sunday, September 23, 2012

தமிழுக்கும் அமுதென்று பேர்!!!


படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்


மனசுக்குப் புத்தியில்லை
ஓடி ஓடிப்போகிறது
அவள் பின்னால்
மூளை கூப்பிடக் கூப்பிட
இழுத்து வந்து
செருப்பால் அடித்து
கட்டிப் போடுவதே இங்கு
தொழிலாய்ப் போச்சு.

Thursday, September 13, 2012

கவிஞன் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

கவிஞன்
------------

உன் மேல் காதலில் விழுந்த

என்னை கவிஞனாக்கியதாய்

இயம்புகிறாய்! - அது

உண்மையோ இல்லையோ

அறியவில்லை!

பைத்தியக் காரனாக்கிவிட்டு

அதுவே எனது இயல்புமாக்கி

விட்டாய் !!

காதல் செய்வீர் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

 காதல் செய்வீர்
----------------------
ஒருவரை மட்டுமே

உருகி உருகி

நினைந்து நினைந்து

மருகி மருகி

வாழும் நிலை

காதலில் மட்டுமே.

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்


நீ வரும் வரை

உன்னைத் தேடுகிறேன்

நீ வந்த பிறகு

என்னைத் தேடுகிறேன்.

Wednesday, September 12, 2012

உலகு - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

உலகு
----------


எனது நதி தேடுவது

உன்னையே அடைந்திடும்

வழி தனையே!!

உன்னிலே முற்றிலும்

தன்னை கலந்திடத் தானே!!!

உடலும் உள்ளமும்

ஒரு சேர மேலெழும்புதல்

நறுமணப் புகை போல்

உன் மேல் படந்திடவே!!!

என்னைச் சுற்றிலும்

பல உலகங்கள் - ஆனால்

நீயே எனது உலகானாய்!!!

உலகே எனக்கு நீயானாய்!!!

Tuesday, September 11, 2012

சிற்பியின் - நுண்ணரசியல்

மனதிற்க்கு பிடித்த காணொளிகளில் மிகவும் பிடித்தது :


Friday, August 31, 2012

புத்திசாலி பறவைகள் - Finding New ways

Fishing - Adapting to New Techniques




Cracking Nuts - Adapting to New Environment

உனக்கும் எனக்கும்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaathal Kavithaigal


உனக்கும்  எனக்கும்
---------------------------

அழகே, நீ என்னை தடுத்திடும் போதும் ..
உன்னை நான் "மிஸ்" பண்ணாமல் இருக்க கற்றுகொடு !

தற்போதைக்கு ,
நம் சந்திப்பும் ,முத்த பரிமாறுதல்களும்
நிகழ்த்திட முடியாததாகவே
இருந்துவிடட்டும்  !
இல்லையென்றால்
அந்த காட்சியின் நினைவுகள் கூட
என்னை கொன்று விடக்கூடும்

எல்லா விதத்திலும் முயற்சிக்கிறேன்
உன்னிடம் உணர்த்திடவும் ,
உணர்த்தாமல் அப்படியே விட்டுவிடவும் !
உனக்கும்  எனக்கும் இடையில்
எந்த ஒரு உறவும் இல்லையென  நான் சொன்ன
சொற்களில் நிழலாக நகர்வது
உன் மீதான அதிக அன்பாகவே இருக்கிறது ...
முதல் நாள் அயலாய் வந்தாய்
மறுநாள் என் இரவுகளை தின்றாய்
பழகிட பழகிட அழகாய் வருகிறாய்
சில நிகழ்வுகளுக்கான காரணங்களை தருகிறாய்
எந்த காரணமும் இல்லாமல்
உன்னுடன்  ஒட்டிகொண்டிருகிறேன் !
                                                                                                                                நன்றி : மீனா

Wednesday, August 29, 2012

களங்கம்- தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

களங்கம்
-------------

களங்கப்படுத்தியவனையே

கல்யாணம் கட்டிவைப்பது

களங்கப்பட்டவளுக்கு

எவ்வகையில்

நியாயம்?.


மதி !


யார் சொன்னது
நிலா ஒளிரும் தேயுமென
தினம் தினம்
என் கண்முன்
முழுமதியாய் ஒளிருமிவள் யாரோ!!!

இம்மண்ணில்
பிரியமாய் இறங்கிய
இம்மதியின் மதிகண்டோ
வானின் நிலா வெட்கி
மறைகிறதோ!!!

Wednesday, August 22, 2012

சுமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

சுமை
--------

கையில் உன்னை ஏந்தியபோது

திடுக்கிட்டு பயந்து சொன்னாய்

நான் மிகக் கனமென்று

தினம் தினம் சுமக்கிறேனே

உன்னை என் நெஞ்சில்

இதற்காய் என்ன சொல்வாய்?

Friday, August 17, 2012

வாகனப் பதிவெண்கள் தமிழில் - எவ்வாறு எழுதுவது?


தமிழ்த்தாய் வாழ்த்து


யுகங்கள் - தமிழ் காதல் கவிதைகள் -- Tamil Kaadhal Kavithaigal

யுகங்கள்
-------------

வானில் வட்ட நிலா

மறுமுறை தோன்ற

ஓர் பகலே!!!

சுட்டெரிக்கும் சூரியனுக்கோ

ஓரிரவே!!

உனைபிரிந்து மறுநாள்

வருவதற்க்குள்

கடினமாய் கடந்திடுதே

பல யுகங்கள் !!!

மௌனம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

மௌனம்
-------------

என்னுடன் நீயிருக்கும்

தருணங்களில் வேகங்காட்டும்

என் கடிகை!

 நீ செல்லும்

அத்தருணத்திலே 

என் மனம்போல்

மௌனிப்பதேன்!!

Wednesday, August 15, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதை

இதயமும் இடைவெளி

விட்டுத்தான்

துடிக்கும் அந்த

இடைவெளியும் உன்னைப்

பற்றித்தான்  நினைக்கும்...!!!


( நன்றி : இரத்தன்)

Tuesday, August 7, 2012

Tamil Kavithai

 உறவு

 நண்பர்களாய் சந்தித்து

 காதலர்களாய் பயணித்து

 கணவன் மனைவி போல் 

 வாழ்ந்த வாழ்வு

 “தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்

  கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.

Wednesday, January 25, 2012

தமிழ்கவிதை - Tamil kavithai

வரம்

நினைக்கும் போது வந்து


நினையாததைத் தந்து

நித்திலம் போல

நெஞ்சத்தில் நிலைத்து

நின்று நித்தமெனக்கு

நெக்குருகி யாம்

தந்த தரிசனங்கள்

வகை எவ்வகை!!!