Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Thursday, July 2, 2020

சீதோசனம்

என்னவளே!!
உன் சிறு புன்னகையின் - மூலம்
என் வாழ்க்கையின்
அனைத்து
சீதோசன நிலைகளையும்
மாற்றியே விடுகிறாய் !!!

Tuesday, September 25, 2012

உளறல்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

உளறல்
----------

எனது உளறல்கள்

அனைத்தையும்

அரிய கவிதை

என்கிறாய்!!!

கவிதைகளை

என்னவென்பாய்?

Sunday, September 23, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்


மனசுக்குப் புத்தியில்லை
ஓடி ஓடிப்போகிறது
அவள் பின்னால்
மூளை கூப்பிடக் கூப்பிட
இழுத்து வந்து
செருப்பால் அடித்து
கட்டிப் போடுவதே இங்கு
தொழிலாய்ப் போச்சு.

Friday, August 17, 2012

மௌனம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

மௌனம்
-------------

என்னுடன் நீயிருக்கும்

தருணங்களில் வேகங்காட்டும்

என் கடிகை!

 நீ செல்லும்

அத்தருணத்திலே 

என் மனம்போல்

மௌனிப்பதேன்!!

Wednesday, August 15, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதை

இதயமும் இடைவெளி

விட்டுத்தான்

துடிக்கும் அந்த

இடைவெளியும் உன்னைப்

பற்றித்தான்  நினைக்கும்...!!!


( நன்றி : இரத்தன்)

Tuesday, August 7, 2012

Tamil Kavithai

 உறவு

 நண்பர்களாய் சந்தித்து

 காதலர்களாய் பயணித்து

 கணவன் மனைவி போல் 

 வாழ்ந்த வாழ்வு

 “தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்

  கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.

Sunday, January 16, 2011

Tamil kavithaigal

யாரடா நீ?
==========

ஒரு மழையும் ஒரு புயலும்
ஒன்று சேர ஏற்படுத்துகிறாய் !
எப்படி முடிகிறது உன்னால் மட்டும் ?
நல்லதும் தீயதும் ஒன்றே என்றும்
பொய்யும் உண்மையும் அழகுதான் என்றும்
நீ மட்டுமே சொல்கிறாய் !
மனிதர்களின் பார்வைகள்
கண்ணாடியின் வழியே தோன்றும்
காட்சி பிழைகளான பின்பங்கள் என
நன்றாக உணர்ந்தவன் நீ
அதனாலேயே அதை கல் எரிந்து
உடைதிடவும் உன்னால் மட்டுமே முடிகிறது !
கடவுள் காதல்,காமம்,பெண் எனும் பட்டியலில்
ஒவ்வொன்றுக்குமான உனது
விளக்கங்கள் பிரமிப்பாய் இருக்கிறது .....
பெண் உணர்வுகளின் கடைசி சொட்டு
ரத்தத்தையும் உறிந்துவிடும் ஆண்களுக்கிடையில்
என்னொரு சிறு உணர்வும் கூட
புண்பட்டு விடாது பார்த்துகொள்கிறாய்...
பயணத்தின் வலி நெடுகிலும்
நான் பார்க்கும் ஆண்கள் எல்லோரிடமும்
மனதுக்குள் ஓர் கேள்வியை கேட்கிறேன்
"நீங்கள் யாரும் ஏன் அவனை போல் இருக்கவில்லை " என்று
நான் கேட்கும் கேள்விகளுக்கு நடுவே
இப்போதும் ஒரு புன்னகை செய்வாய்
ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தங்களை
ஓர் புன்னகையில் உன்னால் மட்டுமே
உணர்த்திட முடியும் ......
எல்லோரும் உன்னால் என்னென்னவோ ஆகிறார்கள்
ஆனால், நீ , நீயாகவும் ,நீயே இந்த உலகமாகும்
உன்னால் மட்டுமே இருக்க முடியும் .....
எப்போதும் ...






நன்றி : மீனா...

Thursday, April 22, 2010

Tamil kavithaigal

எ(உ)ன் வானின் நிலா !!


என் வானின் நிலா நீ !
நிலா என்றதாலேயா - என்
ஒவ்வொரு இரவும் புதிதாயிருகிறது !

பௌர்ணமியாய்
அம்மாவாசையாய் - இதற்கிடையில்
வளர்வதும் தேய்வதுமாய் !

வானில் நிலா நீயல்ல
பின்பே உணர்ந்தேன்
நானே யதுவென்று !

அதனால் தானோ
வளர்வதும் தேய்வதுமாய்
நானும் என்னிரவுகளும்!

நிலவல்ல நீயெனக்கு
எனை போர்த்தும் வானம் - உன்னிலே
ஒளிர்வதும் மறைவதுமாய் நான் !

உன் பரந்த மனதில்
எனக்குமோர் இடம்கொடுத்தாய்
வானில் நிலவாய் !

Friday, February 12, 2010

Tamil kavithaigal

மெல்ல கொல்லும் விஷம்
=======================

என்னை மெல்ல கொல்லும் விஷம்

நீ ஒரு அமுதவிஷம் தான்


உன்னை விரும்பியே நான்


குடிக்கிறேன் உன் காதலுடன்


கல் நெஞ்சனையும் கரைத்திடும்


காயங்கள் பல கொடுத்திடும்


இருப்பினும் தீபம் நோக்கிய ஈசல்போல்


தெரிந்தே விழுகிறேன் உன் மேல் - காதலே


இதற்க்காய் இறுமாந்திராதே


என்னவள் காதலோ இதற்க்கும் மேலே


உன்னையல்ல காதலே - உன்


காதலையே நாங்கள் காதலிக்கிறோம்!!

Wednesday, January 13, 2010

Tamil kavithaigal

முழுமை
========

உன்னழகிய மதிமுகத்தை


பவுடர் போட்டு மறைக்கிறாய் நீ !


உன்னிரு செவ்விதழ்களை


வர்ணம் பூசி மறைக்கிறாய் நீ !


உன் வேல் விழிகளை


மையிட்டு மறைக்கிறாய் நீ ! - ஆனால்


என்னிடம் உன்னை மட்டும்


முழுமையாய் மறைப்பதில்லையே அதேன்?




Tamil kavithaigal

அப்பாவி
========

என்னை உன்னுலகில்


தொலைத்துவிட்டு


என்னுலகில்


தேடுகின்ற நான்


அப்பாவி அல்லவா?

Tamil kavithaigal

இடை வெளி
============

நீ தொட்டபோதெல்லாம்


நான் வேண்டாமென்றது


உன்னையல்ல அன்பே !


நம் இருவருக்கிடையே


இருந்த இடைவெளியைத்தான் !!

Tamil kavithaigal

கல்லறைகள்
===========

மண்ணுக்குள் முகம் புதைக்கும்


நெருப்புக் கோழ்யாய் - என்


நெஞ்சுக்குள் முகம் புதைத்த


அக்கணத்தில் உடைந்தன கல்லறைகள்


என் மனக்கல்லறைகள்.

Thursday, August 20, 2009

Tamil kavithaigal

அது காதலாகுமா?
================

நான் உன்னை விட்டு விலகும் போதெல்லாம்
முன்னிலும் நெருங்கியதாகவே உணர்கிறேன்


உனக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்
என்று முன்னிலும் உறுதியாகவே
இறுதியாகவே கூறினாலும்
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் நான்
வெட்கமென்பதே அறியாதவனாயிருக்கிறேன்


என்னையும் அறியாமல் நான்
இவ்வாறு இருப்பதற்க்கு காரணம்
என்னை ஆட்டிப் படைக்கும் சக்தியே
அது தான் காதல் என்றால்
அது இல்லாமல் போக
நான் தான் இல்லாமல் போக வேண்டுமா?


அன்புக்குரியவளை
ஆட்டிப் படைத்து
உடலையும் உள்ளத்தையும்
உருக்குலைக்கும் அது தான்
என் காதல் என்றால்
அது காதலாகுமா?