Showing posts with label முத்தப்பரிமாற்றம். Show all posts
Showing posts with label முத்தப்பரிமாற்றம். Show all posts
Friday, August 31, 2012
உனக்கும் எனக்கும்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaathal Kavithaigal
உனக்கும் எனக்கும்
---------------------------
அழகே, நீ என்னை தடுத்திடும் போதும் ..
உன்னை நான் "மிஸ்" பண்ணாமல் இருக்க கற்றுகொடு !
தற்போதைக்கு ,
நம் சந்திப்பும் ,முத்த பரிமாறுதல்களும்
நிகழ்த்திட முடியாததாகவே
இருந்துவிடட்டும் !
இல்லையென்றால்
அந்த காட்சியின் நினைவுகள் கூட
என்னை கொன்று விடக்கூடும்
எல்லா விதத்திலும் முயற்சிக்கிறேன்
உன்னிடம் உணர்த்திடவும் ,
உணர்த்தாமல் அப்படியே விட்டுவிடவும் !
உனக்கும் எனக்கும் இடையில்
எந்த ஒரு உறவும் இல்லையென நான் சொன்ன
சொற்களில் நிழலாக நகர்வது
உன் மீதான அதிக அன்பாகவே இருக்கிறது ...
முதல் நாள் அயலாய் வந்தாய்
மறுநாள் என் இரவுகளை தின்றாய்
பழகிட பழகிட அழகாய் வருகிறாய்
சில நிகழ்வுகளுக்கான காரணங்களை தருகிறாய்
எந்த காரணமும் இல்லாமல்
உன்னுடன் ஒட்டிகொண்டிருகிறேன் !
நன்றி : மீனா
Labels:
அன்பு,
உறவு,
காதல்,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
முத்தப்பரிமாற்றம்
Subscribe to:
Posts (Atom)