Showing posts with label தமிழ் கவிதைகள். Show all posts
Showing posts with label தமிழ் கவிதைகள். Show all posts

Thursday, July 2, 2020

மாயலோக கன்னி

அடியேய்! 

மனம் கொய்தவளே!

நினைவுகளை

படிமங்களாயும்

பழம் படிமங்களை

மீள் உயிர்களாயும்

மாற்றிடும் 

மாயலோக கன்னியோ - நீ!!!

மயக்கம்

என் இனியவளின்
புன்னகைக்கு
மயங்காத 
நீள் பட்டியலில்
என் வாழ்வு மட்டும்
தப்பிப் பிழைத்திடவா
செய்யும்!!!!

Thursday, January 24, 2013

கலவை - தமிழ் காதல் கவிதைகள்


 கலவை
--------------

பூவில் வாசமும்

நாவில் சுவையும்

வானில் வண்ணமும்

ஊனில் உயிரும்

நீரில் நிறமும்

கண்ணில் காட்சியும்

என்னில் நீயும் !!!

கலந்ததெங்கே?


Wednesday, January 2, 2013

பாடம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

பாடம்
---------

காதல் காமம்

பாடம் புகட்ட

கவிஞனானேன்!!

வாழ்க்கை நிதர்சண

நிலை நிறுத்த

நிர்மூலமாக்கி என்னை

பாடம் ஆக்கினாய்!!

இவ்வஞ்ஞானியை

ஞானியாக்கவா ?

மெய்ஞானியாக்கவா??


Monday, October 8, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்

கூப்பிடு தொலைவில் நீ

என்ன சொல்லிக்

கூப்பிடுவது என்ற

தயக்கத்தில் நான்.

தெரிந்துகொள்ளும் ஆசை

காதலாகிப் போனது.

                 ( நன்றி : இரா. சரவணன்)

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதைகள்

காத்திருந்து காத்திருந்து

சோர்கையில்

நீ வருவாய்

கோபப்படுவேன் நான்

வெட்கப்படத் தெரியாததால்.

காதல் தீபம்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal

காதல் தீபம்
----------------

விரும்பித்தான்

விழுகிறதோ

விட்டில் பூச்சியும்

தீபத்தில் !

காதலில் நானும்!!!

சுற்று- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

சுற்று
---------

புவிக்கோர் சூரியன்

முழுமதிக்கோர் பூமி

எனக்கோ நீ !!!

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதை


இரும்பிலும்

பூக்கள் பூக்கும்

ஜன்னலில்

உன் முகம்.

      ( நன்றி : அந்நியன்)

துடிப்பு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal


துடிப்பு
========

உன்னருகே

இருக்கும் ஒவ்வொரு

தருணத்திலும் நான்

காந்தப் புலத்தில்

அகப்பட்ட

இருப்புத் துண்டாய்

துடிக்கிறேன்!

உனைச் சேர்தற்க்கே!!!

Saturday, October 6, 2012

வாழ்வு- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

வாழ்வு
-----------

என்


உயிரிலும்

உணர்விலும்

நினைவிலும்

உறைந்து விட்டாய்

நீ!


நான்

உயிர்

வாழ்ந்ததும்

வாழ்வதும்

வாழ நினைப்பதும்

உன்னாலே !!

பெய்யெனப் பெய்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

பெய்யெனப் பெய்
-----------------------


சிறு மின்னல் கீற்றாய்

சிறு சிறு மழையாய்

துவங்கி

இடி மின்னலுடன் கூடிய

அடை மழையாய்

இடைவிடாமல்

பெய்யெனப் பெய்கிறாய் 

என்னில்

நீ !!

உயிர்மெய்-தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal

உயிர்மெய்
---------------


உயிர் காதல்

மெய் காமம்

காதலியே நாம் 

உயிர்மெய்யாவது

எப்போது!!!

Tuesday, September 25, 2012

வித்தியாசம்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

வித்தியாசம்
-----------------

கடவுளுக்கும்

காதலியே உனக்கும்

கண்டேனே வித்தியாசம் !!

என் பார்வையில்

நீயோ எங்கும் !!

கடவுளோ?

இனிமை- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

இனிமை
------------

தோற்பதும்

இனிதாவது மனம் ஒத்த

காதலில் மட்டுமே!!!

முயற்சி - தமிழ் கவிதைகள் - Tamil kavithaigal

முயற்சி
------------

சிறகொடிந்த பறவையாய்

இருப்பதாய் நினைப்பதைவிட

மேலே மேலே

பறந்து பறந்து

சிறகொடிதல் அனைத்திலும்

மேலானது!!!

அனுமதி- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal


அனுமதி
------------

உன்னில் நான்

வேறூன்றியுள்ளதாய்

சொன்னாயே நீயன்று !!!

பின் ஏன் என்னை

உன் அநுதின வாழ்வில்

என்னொருயடிகூட

உள் நுழைய அனுமதி

மறுக்கிறாயே நீயோயின்று!!!

ஆக்கிரமிப்பு - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal Kavithaigal

ஆக்கிரமிப்பு
------------------

எண்ணை வளத்திற்க்காய்

நாடுகள் - சரி !!!

என்ன வளத்திற்க்காய்

என்னை நீ?

Monday, September 24, 2012

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்

என் இதயம் கூட

கல்லறை தான்

உன் நினைவுகளை அதில்

புதைத்து இருப்பதால் !!!

                                     ( நன்றி : றதன் )