Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts
Thursday, July 2, 2020
Quotes : Abandon
Labels:
love,
psychology,
Quotes,
reflection,
relationship,
self-knowledge,
thoughts,
அன்பு,
எண்ணம்,
காதலின் அர்த்தம்,
காதல்
Thursday, December 17, 2015
எங்கே சென்றாய் நீ !!
என்னை அன்பு செய்கிறேன்
இன்னும் அதிகமாய் நான் !!
நான்...
நான் மட்டுமல்ல
உணர்தலுக்கு பின்னர்..
எனது கோபங்கள்,
தாபங்கள்,
குறைகள்,
ஆதங்கம்,
எதிர்மறை எண்ணங்களை
எங்கே எடுத்துச் சென்றாய் நீ !!!
இங்கே என்னை மட்டும்
விட்டு விட்டு....!!!
Labels:
அன்பு,
காதல் கவிதைகள்,
காவியக் காதல். kaadhal kavithaigal.,
குறை,
கோபம்,
தவிப்பு...,
தாபம்
Thursday, November 1, 2012
படித்ததால் தெரிந்து கொண்டது ---- அன்பை அடையாளங்காணல்
அன்பை அடையாளங்காணுதல் எப்படி? இப்படி !!! :)
”குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல
இதுகாண் அன்பு என்ரு போதத் திறந்து காட்டாலாகாது.
அன்புடையரான குணக்கண்டவிடத்து இவை உண்மையான
ஈங்கு அன்பு உண்டென்ரு அனுமித்துக் கொள்ளற்பாற்று!!
அன்புடையரான குணம் யாவையோ எனின்...
”குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல
இதுகாண் அன்பு என்ரு போதத் திறந்து காட்டாலாகாது.
அன்புடையரான குணக்கண்டவிடத்து இவை உண்மையான
ஈங்கு அன்பு உண்டென்ரு அனுமித்துக் கொள்ளற்பாற்று!!
அன்புடையரான குணம் யாவையோ எனின்...
- சாவிற் சாதல்
- நோவின் நோதல்
- ஒண்பொருள் கொடுத்தல்
- நன்கினிது மொழிதல்
- புணர்வு நனிவேட்டல்
- பிரிவு நனியிரங்கல்
என இவை” (இது அக்கால உரை நடை, இதுகாற் கொண்டு, இக்கால பொருள் படும் படி கீழ்காண்க)
பொருள் :
“குடத்துள் விளக்கு, உரைக்குள் கத்தி போல.... இதுதான் அன்பு என்று அறியுமாரு திறந்து காட்ட முடியாது. அன்புள்ளவரின்
குணங்களைப் பார்க்கும் போது இவை இருப்பதால் (உண்மையாய்) இங்கே அன்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியும். அன்புள்ளவரின் குணங்கள் என்னென்ன என்றால்..
- சாவிற் சாதல்
- நோவு வந்தால் வருத்தப் படுதல்
- பொருள் உதவி செய்தல்
- நல்லதாய் இனிமையாய் பேசுதல்
- சந்தித்தலை விரும்பல்
- பிரிவில் வருந்தல்
என்பனவாம்.”
(சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் - பாகம் IV பக் : 103)
Labels:
அடையாளம்,
அன்பு,
ஒண்பொருள்,
சாதல்,
நோவின் நோதல்,
பிரிவு,
புணர்வு நனிவேட்டல்
Friday, August 31, 2012
உனக்கும் எனக்கும்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaathal Kavithaigal
உனக்கும் எனக்கும்
---------------------------
அழகே, நீ என்னை தடுத்திடும் போதும் ..
உன்னை நான் "மிஸ்" பண்ணாமல் இருக்க கற்றுகொடு !
தற்போதைக்கு ,
நம் சந்திப்பும் ,முத்த பரிமாறுதல்களும்
நிகழ்த்திட முடியாததாகவே
இருந்துவிடட்டும் !
இல்லையென்றால்
அந்த காட்சியின் நினைவுகள் கூட
என்னை கொன்று விடக்கூடும்
எல்லா விதத்திலும் முயற்சிக்கிறேன்
உன்னிடம் உணர்த்திடவும் ,
உணர்த்தாமல் அப்படியே விட்டுவிடவும் !
உனக்கும் எனக்கும் இடையில்
எந்த ஒரு உறவும் இல்லையென நான் சொன்ன
சொற்களில் நிழலாக நகர்வது
உன் மீதான அதிக அன்பாகவே இருக்கிறது ...
முதல் நாள் அயலாய் வந்தாய்
மறுநாள் என் இரவுகளை தின்றாய்
பழகிட பழகிட அழகாய் வருகிறாய்
சில நிகழ்வுகளுக்கான காரணங்களை தருகிறாய்
எந்த காரணமும் இல்லாமல்
உன்னுடன் ஒட்டிகொண்டிருகிறேன் !
நன்றி : மீனா
Labels:
அன்பு,
உறவு,
காதல்,
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
முத்தப்பரிமாற்றம்
Subscribe to:
Posts (Atom)
