Showing posts with label love kavithaigal. Show all posts
Showing posts with label love kavithaigal. Show all posts

Thursday, July 2, 2020

மாயலோக கன்னி

அடியேய்! 

மனம் கொய்தவளே!

நினைவுகளை

படிமங்களாயும்

பழம் படிமங்களை

மீள் உயிர்களாயும்

மாற்றிடும் 

மாயலோக கன்னியோ - நீ!!!

கடந்து போ !!!

எப்படித்தான்
அனைத்தையுமே
அனாசியமாக
கடந்து போகிறாய் - நீ
மாறாய்
உன்னை மட்டும்
கடப்பது தான்
அனைத்திற்கும்
கடினம் போலும் !!!!

Monday, April 27, 2020

பேச்சு !!!


என்னதான் மௌனமாக
இருக்க முற்பட்டாலும்
மனம் மட்டும்
இடைவிடாது 
பேசிக்கொண்டே தான்
இருக்கிறது
உன்னிடம் !!!

Wednesday, January 2, 2013

உன்மத்தம் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kaadhal kavithaigal


உன்மத்தம்
--------------------------

கடலலைகள் ஓயலாம்

காற்றும் திசை மாறலாம்

காட்சிகாண் கண்களும் 

கவிதைக் கைகளும்

பாதைசெல் கால்களும்

செயல்தனை மறக்கலாம்!

ஓயா உன் நினைவலையால்

ஓங்கிய உன்மத்த நிலை

என்று மாறுமோ !!!

Thursday, November 1, 2012

சமன்- தமிழ் காதல் கவிதைகள் - Tamil kadhal kavithaigal

சமன்
--------

உனது உதட்டோரப் புன்னகைக்கான

எனது காத்திருப்பின்

காரண காரியம்

சமனாகிறது

உனது புன்னகை

மலரும் அத்தருணத்திலேயே !!