Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Thursday, July 2, 2020

மாயலோக கன்னி

அடியேய்! 

மனம் கொய்தவளே!

நினைவுகளை

படிமங்களாயும்

பழம் படிமங்களை

மீள் உயிர்களாயும்

மாற்றிடும் 

மாயலோக கன்னியோ - நீ!!!

Tuesday, February 5, 2013

மனம் புதையா நினைவுகள் - தமிழ் காதல் கவிதைகள்

மனம் புதையா நினைவுகள்
---------------------------------------

பேசிய

பேச்சுக்களும்

உணர்ச்சியோடும்

உணர்வோடும்

உறவாடி

உரையாடிய

உரையாடல்களும்

கலந்திருக்கலாம் - இல்லை

கரைந்திருக்கலாம்

காற்றினிலே!!!



உடலொடு

உடல் மேவ

உரசியதும்

முகத்தோடு

முகம் தேய்த்து

முகர்ந்ததும்

தொட்டதும்

அணைத்ததும்

அனைத்தும்

உணர்வற்று

அணைந்திருக்கலாம்

உடலினிலே!!!


நெஞ்சோடு

நெஞ்சம்

கிளர்க்க

நினைவுகளில்

திளைத்தோம்

திகட்டா

இன்பமதில்

நெஞ்சினில்

நிதம் மோதும்

நினைவுகளை

புதைப்பதெங்கே - நீ

நிரம்பிய என்

மனதினிலா?