Thursday, August 20, 2009

Tamil kavithaigal

அது காதலாகுமா?
================

நான் உன்னை விட்டு விலகும் போதெல்லாம்
முன்னிலும் நெருங்கியதாகவே உணர்கிறேன்


உனக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்
என்று முன்னிலும் உறுதியாகவே
இறுதியாகவே கூறினாலும்
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் நான்
வெட்கமென்பதே அறியாதவனாயிருக்கிறேன்


என்னையும் அறியாமல் நான்
இவ்வாறு இருப்பதற்க்கு காரணம்
என்னை ஆட்டிப் படைக்கும் சக்தியே
அது தான் காதல் என்றால்
அது இல்லாமல் போக
நான் தான் இல்லாமல் போக வேண்டுமா?


அன்புக்குரியவளை
ஆட்டிப் படைத்து
உடலையும் உள்ளத்தையும்
உருக்குலைக்கும் அது தான்
என் காதல் என்றால்
அது காதலாகுமா?

Wednesday, August 5, 2009

Improving anything!!! - Made easy

We always strive hard to improve everything in our life...how we could improve anything without following certain pattern/method?.

Trust following three simple steps would help with simple formula or pattern to follow,

  • The Desire to Improve (should one not long to improve?)
  • The willingness to try new techniques ( it is easier to cling on to familiar things, isn't it?)
  • The motivation to practice (achieving anything without putting into practice?No, Never)
Although these three points looks very simple, but in reality its very difficult.

Try following it for atleast a month and comment here your experiences.

மீண்டும் ஆரம்பம்....

மே மாதம் பதினாறு, பதினேழு மற்றும் பதினெட்டு திகதிகளில் நடந்த கொடுமைகளை அடுத்து மனது எதிலும் நாட்டம் கொள்ளாமல் அலை பாய்ந்தது, உலகமே பார்க்க நடந்தேறிய கொடுமைகளைக் கண்டு , உலகத்தின் மீதே கோபமும், வெறுப்பும் கூடியது...

உலகத்தின் நியதிகள் எப்படி நிர்னயிக்கப் படுகின்றன எனபதற்க்கு சாட்சியங்கள் கூற இனி எவரும் தேவையில்லை !!!

நியாயம் பற்றிப் பேசும் தகுதியை அது இழந்து நாட்கள் பல ஆகிறது...

மனச்சாட்சி மண்ணாங்கட்டியாகிய கதை இதுதான் போலும்...

அன்றைய கொடுமையான நாட்கள் இப்பொழுது வரலாறு ஆகி போனது...

முன்னைய வரலாறுகள் மண்ணாகிப் போனது...

உலகத்தால் சாகடிக்கப்பட்ட ஆத்மாகள்...அப்படியே இருந்து பட்டு போகட்டும்...

இனி நம்மால் என்னதான் செய்ய முடியும்?

அனைத்தையும் மீறி ,இனி நாம் என்னதான் செய்யப் போகிறோம்!!!