Wednesday, May 19, 2010
Thursday, May 13, 2010
தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்...(தினமணி தலையங்கம் உணர்திடும் உண்மை என்ன? )
Friday, November 13, 2009
Monday, October 26, 2009
விழ விழ எழுவோம் !
Wednesday, August 5, 2009
மீண்டும் ஆரம்பம்....
Monday, May 11, 2009
ராஜீவ் காந்தியின் தீபாவளிக் கொண்டாட்டம்...!
1987 ம் ஆண்டு ஈழத்தமிழர் வாழ்வில் நிறையவே நடைபெற்றது. இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் ஒரு அழிப்புப்படையை ஏவிவிட, அது விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை பலியெடுத்தது. விமானத்தில் இருந்து முதலில் உணவுப்பொட்டலங்கள். பின்னர் ஒப்பந்தம். திலீபனின் உயிர் பறிப்பு. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் தீருவில் தீ. முதல் பெண் மாவீரர் ஆகி மாலதி மரணம். இன்னும் இன்னும். அதன் தொடர்ச்சியாய் அப்பாவிகள் மீதான படுகொலை.
ஒக்ரோபர் 21, 1987 அன்று பாரத மக்கள் ஏன் அனைத்து இந்து மக்களும் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணக் குடாநாடோ சோபையிழந்து அந்நிய இராணுவத்தின் அகோரப்பிடிக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இந்திய இராணுவம் வடக்கு நோக்கி ஒரு முன்னேற்ற முயற்சியில் இறங்கியது. அதற்கு ஆதரவாக கோட்டையில் இருந்து செறிவான எறிகணைத் தாக்குதல் நடாத்தப்படுகிறது. அது யாழ்ப்பாணத்தின் எல்லாப் பாகங்களிலும் விழுந்து வெடிக்கிறது. மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். நிறைய எறிகணைகள் யாழ் மருத்துவமனையை பதம் பார்க்கிறது. பாதுகாப்புக்கு வைத்தியசாலை சிறந்தது என் எண்ணி அதற்குள் ஏராளமானோர் நுழைகிறார்கள். மதியம் ஆரம்பித்த தாக்குதல் இடைவெளி இன்றி தொடர்கிறது.
இப்போது எறிகணைகள் மருத்துவமனையின் நோயாளர் விடுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கிறது. எல்லோரும் கதறியழுதவாறு சிதறி ஓடுகிறார்கள். சிலர் மேல்மாடியில் இருக்கும் எக்ஸ்ரே அலுவலக அறைக்கும், வைத்தியசாலை அலுவலக அறைக்கும் ஓடுகிறார்கள். மேல்மாடி என்பதால் பாதுகாப்புக்கு உகந்தது என எண்ணியிருக்க கூடும். இதற்குள் காயம் அடைந்தவர்கள் ஒருபுறம். உயிர் பிரிந்த உடலமாக கிடந்தவர்கள் ஒருபுறம். மாலை 4.40 மணியளவில் இராணுவம் மேற்கு பக்கமாக வைத்தியசாலைக்குள் நுழைகிறது. ஊழியர்கள் தமது சீருடைகளை தரித்து நிற்கின்றனர். மருத்துவர்களும் தத்தமது உடைகளை அணிந்து அச்சத்துடன் செய்வதறியாது நிற்கின்றனர். இராணுவம் சுட்டபடி உள்ளே நுழைகிறது.
"நாங்கள் ஊழியர்கள்" என்று ஆங்கிலத்தில் ஊழியர்கள் கத்துகிறார்கள். நாங்கள் "சிவிலியன்ஸ்" எனப் பொதுமக்கள் கத்துகிறார்கள். இரத்த வெறி பிடித்த இந்திய இராணுவத்திற்கு இது விளங்குமா? சுட்டுத்தள்ளுகிறது. ஐயோ அம்மா! முருகா! முருகா!! என குழறல் சத்தம் கேட்கிறது. பின்னர் சூட்டுச் சத்தம். இப்போது அந்த குழறல் சத்தங்கள் அடங்குகிறது. நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த அப்பாவி நோயாளர்கள் இங்கும் அங்கும் திகிலுடன் ஓடுகிறார்கள். அங்கே நின்ற ஒரு சிறுவனும் (வயது 15) சிதறி ஓடுகிறான். அவனது தந்தை ஒரு வைத்தியசாலை ஊழியர். இப்படி ஒவ்வொரு விடுதியாக இராணுவம் நுழைந்து தனது மிலேச்சத்தனமான கைவரிசையை காட்டி கொண்டிருக்க இருள் சூழ்ந்து கொண்டது. எல்லோரையும் பயம் கவ்விக்கொண்டது. செய்வதறியாது கட்டில்களுக்கு கீழே படுத்தவர்களும், இறந்தவர்களோடு இறந்தவர்களாக பாவனை செய்து படுத்தவர்களும் என நோயாளர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். இரவு எங்காவது காயம் அடைந்தவர்களின் முனகல்சத்தம் கேட்கும். அந்த இடத்தை நோக்கி 'டுமீல்' 'டுமீல்' என துப்பாக்கி ரவை பாயும். பின்னர் அந்த சத்தம் அடங்கி விடும். இவ்வாறு அன்று இரவு முழுவதும் முனகல் சத்தமும் பின்னர் சூட்டுச் சத்தமும் நடந்தது. ஏன் என கேட்காமல் அப்பாவிகளை சுட்டுத்தள்ளி தனது கொலைவெறிகளை தீர்த்துக்கொண்டது.
அடுத்தநாள் காலை விடிந்தது(22-10-1987). காலை 8மணியளவில யாரோ ஒரு பெரியவர் இராணுவத்துடன் நோயாளர்களுக்காகவும் நிலைமைகளுக்காகவும் வாதாடினார். பின்னர் வழமைபோல சூட்டுச்சத்தம். ஆட்கள் அலறித்துடித்தபடி வீழ்ந்தனர். அவர் வேறுயாருமல்ல வைத்திய நிபுணர், கலாநிதி அ.சிவபாதசுந்தரம். அவரோடு இறந்தது சில தாதிமார்கள். இச்சத்தம் எல்லா விடுதிகளுக்கும் கேட்டது. மிகுதியாக உயிருடன் இருந்தவர்களை இது உலுப்பி எடுத்தது. என்ன நடக்கும் என அச்சத்தில் இருந்தார்கள்.
10.30 மணி உயிருடன் இருப்பவர்களை கைகளை உயர்த்தியபடி வெளியே வரச்சொல்கிறது இராணுவம். அச்சத்துடன் எல்லோரும் என்னநடக்குமோ என எண்ணியபடி வெளியே வருகிறார்கள். அங்கே இறந்த உடல்கள் எல்லாம் பனங்கிழங்கு அடுக்கியது போல கிடந்தது. வீங்கிய உடல்கள். சிதறிய உறுப்புகள் என பார்ப்பதற்கு கோரமாக இருந்தது. அதற்குள் காயப்பட்டு குறை உயிரில் இருந்தவர்களும் அடங்குவர். அந்த சிறுவனும் நண்பனும் வெளியே வருகிறார்கள். அவனுடைய தாயாருடன் ஒரு தம்பி முன்னே செல்வதை காண்கிறான். வெளியே செல்கிறான். ஆனால் அவனது தந்தையாரையும் இரண்டு தம்பிமாரையும் காணவில்லை. எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது அவனுக்கு. விறாந்தையில் கிடந்த உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தது. இரத்தவாடை மிக மோசமாக இருந்தது. உடலங்களுக்கும், இரத்தவெள்ளத்திற்குள்ளாலும் எல்லோரும் வெளியே வருகிறார்கள். கைகளை கூப்பியபடி கிடக்கும் உடலங்கள் (கும்பிட கும்பிட சுட்டிருப்பார்கள்), மகனை கட்டியணைத்தபடி கிடக்கும் தாய், தந்தை உடலம் என மிகவும் உருக்கமாகவும் கோரமாகவும் காட்சியளித்தது.
அவன் தந்தையை தேடினான். எங்கும் காணவில்லை. இரவு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் உற்வினர் இருந்தால் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவனும் சென்று பார்க்கிறான். அங்கே அவனது தந்தையின் உயிரற்ற உடலத்தைப் பார்க்கிறான். திகைத்துப்போகிறான். தம்பிமாரை காணவில்லை. அங்கே காயமடைந்த ஒருவர் சொல்கிறார், "தம்பி உங்கள் அப்பா காயமடைந்த ஒருவர் தண்ணீர் கேட்ட போது, மேசையில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் கொடுக்க முயன்ற வேளை சிப்பாய் ஒருவனால் சுடப்பட்டு இறந்தார். மனம் கொதித்தான். இருந்தும் நிலைமை மோசம். என்ன செய்ய முடியும்.
இனி தகனக்கிரியைகளை நடத்தவேண்டும் என ஒரு வைத்தியரை அணுகிகேட்க, அவரும் இராணுவத்துடன் தொடர்பு கொண்டார். பிரேத அறைக்கு அருகில் இருந்த வெளியில் எல்லோர் சடலங்களையும் அடுக்கி வைத்திருந்தனர். அந்த சிறுவனின் தந்தையின் உடலை ஒரு கரையாக வைத்து தீயை மூட்ட சொன்னார்கள். அவனும் தீயை மூட்டினான். அவனை கொண்டே ஏனைய உடல்களுக்கும் தீ மூட்டுவித்தனர். எல்லோர் உடல்களும் தீயுடன் சங்கமமாகியது. 15வயது சிறுவன் 70ற்கு மேற்பட்ட உடலங்களுக்கு தீ வைக்கிறான். இந்த கொடுமை எங்கும் நடக்குமா.
ஒருமாதத்தின் பின்னர் அவனது தம்பியரைக் கண்டுபிடித்தான் அந்த சிறுவன். அவர்கள் கூறினர். "உங்களை இராணுவம் சுடத்தான் (22.10.1987 காலை) கூட்டிக்கொண்டு போறான் என நினைத்து, நாம் காயப்பட்டவர்களுடன் கிடந்து பின்னர் நல்லூரிற்கு தப்பி ஓடி வந்தோம் என்றனர்.
இந்திய இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்தால் 70 ற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டணர். அவர்களில் 23 வைத்தியசாலை ஊழியர் அடங்குவர். மூன்று சிறப்பியல் வைத்திய நிபுணர்களும் அடங்குவர். விபரம்....
வைத்திய கலாநிதி அ. சிவபாதசுந்தரம்
வைத்திய கலாநிதி எம்.கே. கணேசரட்ணம்
வைத்திய கலாநிதி பரிமேலழகர்
தலைமைத்தாதி திருமதி வடிவேலு
தாதி திருமதி லீலாவதி
தாதி திருமதி சிவபாக்கியம்
தாதி ராமநாதன்
வாகன ஓட்டுநர் சண்முகலிங்கம்
தொலைபேசி இயக்குநர் கனகலிங்கம்
கள மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜா
கள மேற்பார்வையாளர் செல்வராஜா
கோ.உருத்திரன்
க.வேதாரணியம்
இரத்தினராஜா
மு.துரைராஜா
மெ.வரதராஜா
இரா.சுகுமார்
க.சிவராஜா
க.சிவலோகநாதன்
சி.ஜெகநாதன்
இரா.சுப்பிரமணியம்
எஸ்.மார்க்கண்டு
க.பீற்றர்
இன்று அந்த சிறுவன் ஒரு விடுதலைப் போராளி. எவைகள் எமது போராளிகளை உருவாக்குகின்றன். எவைகள் எமது விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்தும் என்பதற்கு இவை சான்றுகள்.
ஈழத்தமிழர் வாழ்வில் நடைபெற்ற இந்த துன்ப நிகழ்வுகளின் பதிவுகள் தொடரும்....!
இதே தினத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எமது கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
Wednesday, March 11, 2009
கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்!
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க
துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!
தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!
இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!
தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
திவாகரன்,தம்பிரான் தோழர்
Thanks To Thivakaran....
Monday, February 16, 2009
The cost of war and the price of Victory
Find the link below, it is an interview with managala samaweera, a dissent raising voice against pakses.
The cost of war and the price of Victory
My comments in telegraph :
Thanks peter for coming up with this article...
I recently called my aunt in Mannar, she says they are unaware of whats happening in SL..coz of entire MEDIA black-out.
One must understand the actual intend of SL Govt..
Systematically, they trying to destabilize instutitions either by issuing direct threats or intimidating them.
If a govt could issue threat to Foreigners, diplomats and INGOs, even denying UN to setup its office, threatening ICRC of dire consequences if its presence in vanni is found....what do you call this?
International community still wants evidence to raise its voice...For UN, the news is very minimal to act upon it...UN Secretary General endorses the Action of SL president based on the assurances he is giving.
What happened to all the INTERNATIONAL PACTS?. who first torn into pieces?. Why International community keeps its mouth shut when all that happened?
When there is clear evidence of Mass killings and systemic and systematic Genocide..there is nobody to raise their concern...
I know, the Entire world would come once everything been done and no one living in vanni.
If we go by SL Govts statements made about number of LTTE present in vanni...one would surely raise a question...how LTTE being in hundreds could manage this huge number of stranded people in vanni?. Even if they are armed, whats the possibility of holding them back? getting them moved along with them while they retreated from kili to mullai to puthukudiyiruppu...
Oh !! Is there no genuine intellectual who could raise it to the world to hear?.
We all know LTTE is outnumbered by SLA..and why should they bomb every inch of vanni?. Can't this "so called" world's best army as boasted by SL Govt, could blow them away with their mighty army in a jiffy?. Why should they resort to bombing of civilians?.
What more clear evident needed to take action against Srilankan top executives, when Defence Secretary openly justifies "bombing of hospital as legitimate target"...what more evidence the WORLD wants to take action...
Its really frustrating to LIVE begging these eunuchs (UN,INDIA,co-chairs) to take action...
Thursday, February 12, 2009
தமிழினத் துரோகம் - கண்டு கொள்ளுங்கள் துரோகிகளை மக்களே !!!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009, 10:11.22 AM GMT +05:30 ]
தமிழக மக்களிடத்தில் ஈழ ஆதரவு மேலோங்கி வரும் இந்நிலையில் அதை கெடுக்கும் வகையில் தமிழின விரோத மற்றும் துரோக சக்திகள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தியும் தமிழக மக்களின் ஆதரவை திசை திருப்பியும் தமிழ்மக்களது எழுச்சியை கெடுக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் முயற்சியால் அக்.2 ஆம் தேதி அனைத்துக் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதத்துக்குப் பிறகு மயிலை மாங்கொல்லையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தி.மு.க. கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். என்ன கூறினார்? ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இரண்டு வார கெடுவுக்குள் போர் நிறுத்தம் வரா விட்டால், நாடாளுமன்ற உறுப் பினர்கள் பதவி விலகுவார்கள் என்றார். தொடர்ந்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தங்கள் பதவி விலகல் கடிதத்தை முன் கூட்டியே கலைஞரிடம் தரத் தொடங்கினர்.
மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி, இதே கோரிக்கை வலியுறுத்தப் பட்டது. அதற்கும் மத்திய அரசு அசையவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். மீண்டும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டது. வெளிநாட்டுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்த வற் புறுத்தப்பட்டது. முதல்வரை சந்திக்க சென்னை வந்த பிரணாப் முகர்ஜி யிடமும் நேரில் வலியுறுத்தப்பட்டது. பிரணாப் முகர்ஜி இலங்கை போக வில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலுக்கான கெடு முடிந்ததும், அத்திட்டம் கைவிடப்பட்டது. அனைத்துக் கட்சியினரை அழைத்துக் கொண்டு முதல்வர் டெல்லி போய் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து நேரில் வற்புறுத்தினார். எந்தத் துரும்பும் அசையவில்லை. ராணுவத்தின் இனப் படுகொலை தொடர்ந்து கொண்டே இருந்தது; மேலும் மேலும் தீவிர மானது.
கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது. 3 லட்சம் மக்கள் விடுதலைப்புலி களோடு முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். முல்லைத் தீவையும் ராணுவம் சுற்றி வளைத்து குண்டுகளை வீசி வருகிறது. ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. உணவு, மருந்து பொருள்கள் இல்லை. 'போரில்லாத பகுதியாக' ராணுவம் அறிவித்தப் பகுதியிலும் குண்டு வீச்சு, ஷெல் வீச்சு தொடருகிறது. புதுக் குடியிருப்பில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீதே குண்டுகளை வீசி நோயாளிகளை பிணமாக்கியது சிங்கள ராணுவம். எங்கும் தமிழனின் மரண ஓலங்கள்; ரத்தவாடைகள்; பிணக் குவியல்கள்.
அய்.நா.வே போரை நிறுத்தக் கோரி தனது தூதுவரை போர் முனைக்கு நேரே அனுப்புகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் என்பவரும் கூட்டாக இணைந்து போரை நிறுத்தக் கோரி அறிக்கை விடுத்தனர். ஜப்பான், நார்வே, ஜெர்மன் நாடுகளும் போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தன. உலக நாடு களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று, ராஜபக்சேயின் தம்பியும், ராணுவ செயலாளருமான கோத்தபய ராஜபக்சே அறிவித்து விட்டார். தமிழ் மக்களின் ராணுவமான விடுதலைப் புலிகள், தற்காப்பு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உதவிக்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தின் வாகனங்கள் மீதும், மருத்துவ மனைகள் மீதும் ராணுவம் குண்டு வீச்சு நடத்துகிறது. அய்.நா.வின் பிரதிநிதி களே போர்முனைப் பகுதிகளில் குண்டு வீச்சு காயங்களுக்கு உள்ளாகி விட்டனர்.
சர்வதேசமுமே கண்டிக்கும் இந்த இனப் படுகொலையைக் கண்டித்து, போரை நிறுத்தச் சொல்லாத நாடு இந்தியா தான். அதுவும் தமிழகத்தின் ஒருமித்த வேண்டுகோள், போராட்டங் களை அலட்சியப்படுத்தி, ஆணவச் சிரிப்பு சிரித்து வருகிறது. இவ்வளவுக் கும் பிறகும் இந்தியாவைக் கண்டித்தால் - ஒவ்வொரு நாளும் நடக்கும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரினால் - சிங்கள இனப்படு கொலைக்கு எதிரான குமுறலை தி.மு.க. ஆட்சிக்கு எதிரான 'அரசியல்' என்கிறது - தி.மு.க. தலைமை!
"மத்திய அரசை எதிர்க்கவே கூடாது; தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்" என்று மீண்டும் தோல்வி கண்ட "வலியுறுத்தல்" பாதையிலேயே பயணம் செய்ய கலைஞர் கருணாநிதி அழைக்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டும் என்ற அற்ப அரசியல் லாபத்துக்காக அன்றாடம் நடக்கும் "இனப் படுகொலை"யை எதிர்த்துப் போராடக் கூடாது என்கிறார்கள்.
மத்திய அரசு - இனப்படு கொலையை தடுக்க வேண்டும் என்று மனம் திருந்தும் காலம் வரை காத் திருக்க வேண்டும் என்கிறார்கள். தி.மு.க. உருவாக்கியுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்தியுள்ள கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இவ்வாறு பேசியுள்ளார்:
"நம்முடைய குரலை, நம்முடைய வார்த்தையை அவர்கள் மதிப்பார்களா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் நம்முடைய நன்மைக்காகத் தான் தமிழ் நாட்டில் கலைஞருடைய ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறோமோ, அப்படித்தான் டெல்லி யிலே சோனியாகாந்தி வழிகாட்டு தலிலேயே மன்மோகன்சிங் அரசு நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்" என்று பேசியுள்ளார் ('முரசொலி' பிப்.10)
'தமிழர் நல உரிமைப் பேரவை' என்ற பெயரில் நடைபெறும் கூட்டங் களில் 'தி.மு.க. கூட்டணி நலன்கள்தான்' முன்னிறுத்தப்படுகிறதே தவிர, ஈழத் தமிழர் இனப் படுகொலை பற்றியோ இந்தியாவின் துரோகம் பற்றியோ சிங்கள அரசை கண்டித்தோ, கருத்துகள் முன் வைக்கப்படுவதில்லை. இதை பேராசிரியர் அன்பழகனே, தனது உரையில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
"இங்கே பேசிய நண்பர்கள்.... வருங்காலத்திலேகூட தமிழகத்திலே கலைஞருடைய கையைத்தான் வலி யுறுத்த வேண்டும். தேர்தலிலே ஏமாந்து விடக் கூடாது என்பதை யெல்லாம் எடுத்துச் சொன் னார்கள். அது ஓரளவுக்கு அரசியல் தான். அந்த அரசியலை கழகம் சார்பாக இன்றைக்கு நான் பேசத் தயாராக இல்லை" ('முரசொலி' பிப்.10)
- என்று பேசியிருப்பதன் மூலம், "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் பரப்புரை எப்படி நடக்கிறது என்பதை அவரே வெளிப் படுத்தியுள்ளார். அப்படிப் பேசிய பேராசிரியர் அன்பழகனோ முடிவில் எதைப்பேச மாட்டேன் என்றாரோ, அதே அரசியலைத்தான் அவரும் வலியுறுத்தியும் உள்ளார்.
ஒவ்வொரு நாளும் தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளைப் பற்றியோ
போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியோ
வீதியெங்கும் விமான குண்டு வீச்சுக்கு ஷெல் தாக்குதலுக்கும் பலியாகி பிணமாகக் கிடக்கும் தமிழினத்தைப் பற்றியோ
மருத்துவமனைகள் மீதே குண்டுகள் வீசப்படுவது பற்றியோ
- இவர்கள் மக்களிடம் பேசுவதற்கு தயாராக இல்லை. காங்கிரசுக்காரர் களோடு கைகோர்த்துக் கொண்டு, 'மத்திய அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும்" வரப்போகும் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சேறு வாரி இறைக்கப்படுகிறது. ஆனால் ராணுவக் கொடுமைகள் அடக்கி வாசிக்கப்படு கிறது. இதற்குப் பெயர் இலங்கைத் தமிழர் நல உரிமைக் கூட்டமைப்பாம்!
தமிழின உணர்வாளர்களே! இந்த வரலாற்றுத் துரோகத்தை அடையாளம் காணத் தவறாதீர்கள்!
courtesy : tamilwin.com