Showing posts with label தமிழ் கவிதைகள்;tamil kavithaigal. Show all posts
Showing posts with label தமிழ் கவிதைகள்;tamil kavithaigal. Show all posts

Friday, July 11, 2014

ஓரிடத்தில் - தமிழ் காதல் கவிதைகள்

ஓரிடத்தில்
============

பார்த்தால் பரவிடும் பரவசமும்
தொட்டால் துளிர்விடும் இன்பமும்
கட்டினால் ததும்பிடும் தழுவழும்
கிட்டினால் கிளைத்திடும் கிளர்ச்சியும்
விட்டால் விடாத வேதனையும்
காதலும் காமமும்
ஆதலும் சாதலும்
ஓரிடத்தில் - உன்னிடத்தில் !!!

கடத்தல் - தமிழ் காதல் கவிதைகள்

கடத்தல்
===========
அனைத்தையும் எளிதில்
கடந்து போகும் என்னால்
உன்னை என்றும் 
கடக்க இயலாது
எப்படி நானே 
என்னைக் கடப்பது?

Tuesday, February 5, 2013

மனம் புதையா நினைவுகள் - தமிழ் காதல் கவிதைகள்

மனம் புதையா நினைவுகள்
---------------------------------------

பேசிய

பேச்சுக்களும்

உணர்ச்சியோடும்

உணர்வோடும்

உறவாடி

உரையாடிய

உரையாடல்களும்

கலந்திருக்கலாம் - இல்லை

கரைந்திருக்கலாம்

காற்றினிலே!!!



உடலொடு

உடல் மேவ

உரசியதும்

முகத்தோடு

முகம் தேய்த்து

முகர்ந்ததும்

தொட்டதும்

அணைத்ததும்

அனைத்தும்

உணர்வற்று

அணைந்திருக்கலாம்

உடலினிலே!!!


நெஞ்சோடு

நெஞ்சம்

கிளர்க்க

நினைவுகளில்

திளைத்தோம்

திகட்டா

இன்பமதில்

நெஞ்சினில்

நிதம் மோதும்

நினைவுகளை

புதைப்பதெங்கே - நீ

நிரம்பிய என்

மனதினிலா?

Tuesday, January 15, 2013

காதல் - தமிழ் காதல் கவிதைகள் - Tamil kaadhal kavithaigal

காதல்
=======

கனிவுடனே

காதல் காமம்

கற்பித்தாய் !

களித்தோம் - பின்

கழித்தாய் !

காதலில் நித்தம்

நினைத்தாலே போதுமென

நில் சற்றே

விலகியென்றாய் - நான்

விளங்கிடவே

நிதர்சன வாழ்க்கை

நிதம் சொன்னாய் !

சித்தம் கலங்கா

தத்தம் கடமை

நித்தம் புரிவோமென்றாய் !

காலை மாலை

காணும் உன்

கவின்முகம் காணா

கதறும் மனதை

கல்லாக்கிக் கொள்ளலும்

காதலோ?.

Friday, January 4, 2013

திண்டாட்டம் - தமிழ் கவிதைகள் - Tamil kavithaigal

திண்டாட்டம்
------------------

இறந்த தலைவனுக்கோ

பிறந்த நாள் கொண்டாட்டம் !!

இங்கே இருப்பவனுக்கோ

வாழ்வே திண்டாட்டம் !!!

பாட்டுக்குப் பாரதி !!!

ச்சம் தவிர். 
ண்மை தவறேல். 
ளைத்தல் இகழ்ச்சி. 
கை திறன். 
டலினை உறுதிசெய். 

ண்மிக விரும்பு.
ண்ணுவ துயர்வு. 
றுபோல் நட. 
ம்பொறி ஆட்சிகொள். 
ற்றுமை வலிமையாம். 

ய்த லொழி. 
டதங் குறை. 
ற்ற தொழுகு. 
காலம் அழியேல். 
கிளைபல தாங்கேல். 

கீழோர்க்கு அஞ்சேல். 
குன்றென நிமிர்ந்துநில். 
கூடித் தொழில் செய். 
கெடுப்பது சோர்வு. 
கேட்டிலும் துணிந்துநில். 

கைத்தொழில் போற்று. 
கொடுமையை எதிர்த்து நில். 
கோல்கைக் கொண்டு வாழ். 
கவ்(கௌ)வியதை விடேல். 
ரித்திரத் தேர்ச்சிகொள். 

சாவதற்கு அஞ்சேல். 
சிதையா நெஞ்சு கொள். 
சீறுவோர்ச் சீறு. 
சுமையினுக்கு இளைத்திடேல். 
சூரரைப் போற்று. 

செய்வது துணிந்து செய். 
சேர்க்கை அழியேல். 
சைகையிற் பொருளுணர். 
சொல்வது தெளிந்து சொல். 
சோதிடந் தனையிகழ். 

சௌரியந் தவறேல். 
மலிபோல் வாழேல். 
ஞாயிறு போற்று. 
ஞிமிரென இன்புறு. 
ஞெகிழ்வத தருளின். 

ஞேயங் காத்தல் செய். 
ன்மை இழவேல். 
தாழ்ந்து நடவேல். 
திருவினை வென்றுவாழ். 
தீயோர்க்கு அஞ்சேல். 

துன்பம் மறந்திடு. 
தூற்றுதல் ஒழி. 
தெய்வம் நீ என்றுணர். 
தேசத்தைக் காத்தல்செய். 
தையலை உயர்வு செய். 

தொன்மைக்கு அஞ்சேல். 
தோல்வியிற் கலங்கேல். 
வத்தினை நிதம் புரி. 
ன்று கருது. 
நாளெலாம் வினைசெய். 

நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல். 

நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
ணத்தினைப் பெருக்கு. 

பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல். 

பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
ந்திரம் வலிமை. 

மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல்.

மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல். 

வனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில். 

ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர். 

ரௌத்திரம் பழகு.
வம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ். 

(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
ருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு. 

வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு.

--சுப்பையா (எ) சுப்பிரமணியன் (எ) பாரதி - பிறப்பு - திசம்பர் 11, 1882

Thursday, January 3, 2013

படித்ததில் பிடித்தது - தமிழ் கவிதைகள்

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

                                                               நன்றி : கவிஞர் காசி.ஆனந்தன்