காதல்
=======
கனிவுடனே
காதல் காமம்
கற்பித்தாய் !
களித்தோம் - பின்
கழித்தாய் !
காதலில் நித்தம்
நினைத்தாலே போதுமென
நில் சற்றே
விலகியென்றாய் - நான்
விளங்கிடவே
நிதர்சன வாழ்க்கை
நிதம் சொன்னாய் !
சித்தம் கலங்கா
தத்தம் கடமை
நித்தம் புரிவோமென்றாய் !
காலை மாலை
காணும் உன்
கவின்முகம் காணா
கதறும் மனதை
கல்லாக்கிக் கொள்ளலும்
காதலோ?.
Showing posts with label சித்தம். Show all posts
Showing posts with label சித்தம். Show all posts
Tuesday, January 15, 2013
Subscribe to:
Posts (Atom)