Showing posts with label காதலின் அர்த்தம். Show all posts
Showing posts with label காதலின் அர்த்தம். Show all posts

Wednesday, January 2, 2013

படித்ததில் பிடித்தது - தமிழ் காதல் கவிதைகள்

காதல் என்ற வார்த்தையில்
காமத்தை ஒளித்து
காவிய காதல் என்று
கற்புரம் அடித்து
இன்றோ நாளையோ

நாளை மறுதினமோ
மணப்போம் என்று சொல்லி
பேசிய போதெல்லாம்
உன் விழி பாவைகள்
கடந்து சென்ற பாதையை
பார்த்தேனும்
பாவிச் சிறுக்கி இவளுக்கு
பாடம் புரிந்திருக்க வேணும்
புதிராய் நின்றுவிட்ட
வாழ்க்கை அரிச்சுவடிகளை
தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை
காதலின் அர்த்தம் மட்டும்
உன் அகராதியிலாவது கண்டு சொல்
காதலின் அர்த்தம் காமம் மட்டுமேவா 
என்று...


                                                            ( நன்றி : விண்முகில்)