Wednesday, July 2, 2008

வாழ்க்கை - காதல், ஓடிப்போதல், கல்யாணம் - (பாகம் ஒன்று)

"இது என்னுடைய முதல் தமிழ் பதிப்பு, தயைகூர்ந்து பிற மொழி படிப்பாளர்கள் பொறுத்து அருளுங்கள் "
-- This is my first post in TAMIL, other language readers please bear with me
என்னுரை

"காதல்", "ஓடிப்போதல்,"கல்யாணம் " பற்றி எழுதுவது என்று முடிவு செய்தாகிவிட்டது, ஆனால் எங்கிருந்து துவங்குவது பற்றி இன்னும் சரியாக முடிவு செய்யவில்லை. கதையை எங்கேயாவது துவங்கித்தானே ஆக வேண்டியுள்ளது. ஆரம்பத்தைப் பிடித்து விட்டால் மற்றவை தன் பாட்டுக்குப் பின்னாலே வந்து விட போகிறது. இல்லையா ??. கதையைப் போலத்தான் காதலும்னு நினைக்கிறேன். ஆரம்பிக்கிறது அவ்வளவு சுலபம் இல்லைதானோ?. ம்ம்ம்... கல்யாணம்? சிந்திக்க வேண்டிய கேள்வி தான்?. சரி பார்க்கலாம், நாம் எங்கே ஆரம்பிச்சு எங்கே முடிக்கிறோம்னுk...


காதலும் கதை மாதிரிதான்னு நினைக்கிறேன், எங்கேயோ எப்படியோ மனதில் முளை விட்டு, வேர்விட்டு ,மரமாகி, படாத பாடு படுத்திவிடுது மனதையும் மனிதரையும். காதல் என்னவோ கதைகளில் படிக்கும் போதும், பிறர் சொல்ல கேட்கும் போதும் நன்றாகத் தான் இருக்கிறது.


காதல், கல்யாணம் பற்றி எழுதுவதால், நான் காதலுக்கும், கல்யாணத்துக்கும் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, மனதில் பட்டதை எழுதி விடலாமே என்ற எண்ணமே மேலோங்கியதால் உள்ளே விழைவே இது. எது எப்படியாகிலும் எழுதத் தழைப்பட்ட பின்னே பின்வாங்கலாமா, எழுத நினைத்ததை எழுதி விடலாமே. எழுதலாமே !!!

காதல் பண்ணுகிற எவரும் இதனால் உந்தப்பட்டு காதல் மற்றும் கல்யாணம் பண்ணுவதை கைவிட்டு விட்டால் அதற்கு யாரை பொறுப்பேற்க வைப்பது ?. காதலையும் கல்யாணத்தையும் விட இதுவே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் போல் தெரியுது. இது இப்போதைக்கு ஒரு பக்கமாக இருக்கட்டும். சரி நாம் பேச வேண்டிய விஷயத்துக்குப் போவோம்.

ஹ்ம்ம் ....உள்ளேசரி இப்போ நாம் உள்ளதை உள்ளபடியே சொல்லி விடலாமா? இல்லை கூட்டிக் குறைத்து சுவை மிக சொல்லலாமா? ஐயகோ! இதென்ன என் நிலை இப்படி ஆகிடுச்சே? ஏன் என்னால் இப்படி ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. அதுவும் காதல் பற்றி எழுதுவதிலேயேவா இப்படி? பின் காதல் புரிந்து ஓடிப்போகும் நிலை வந்தால் நான் என்னதான் செய்வேனோ? கடவுளே !! (வேறே யாரைத்தான் கூப்பிட நான்?) இப்படி நான் இருந்தால் யார் தான் என்னை காதலிக்கத் துணிவார்? . இவ்வாறு இருந்தால் ஏன் என்னை ஒருவர் காதலிக்க வேண்டும், பின்னர் கஷ்டப்பட வேண்டும்?.

' சுய புராணத்தில்' என்னமோ நான் ஒரு வகையில் ' சுயம்பு' தான். 'சுயம்' விடுத்து செல்வோமா உள்ளே? ...

No comments: