Wednesday, September 10, 2008

இன்றைய குறள் - தெரிந்து தெளிதல்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் அதிகாரம் : தெரிந்து தெளிதல்

பொருள் : ஒருவரை ஆராயாமல் நம்புதலும், ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனை சந்தேகப்படுதலும் ஒருவருக்கு நீங்காத துன்பத்தை கொடுக்கும்.

விளக்கம் : நாம் முன்னைய பதிவிலே இக்குறள் போன்றதொரு "நாலடியார்" பாடல் ஒன்றை பார்த்து இருந்தோம். நாலடியார் பாடலுக்கும் இக்குறளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதை வாசகர்கள் மிகவும் இலகுவாக கண்டு பிடித்து இருப்பீர்கள்.
நாலடியார் "நாம் நம்பி பழகிய ஒருவரை குற்றமுள்ளவராக பின்னர் அறிய நேர்ந்தாலும், அவர் குற்றம் பொறுத்து கொள்தல் நலம்" என நமக்கு அறிவுறுத்துகிறதேயொழிய இதனால் கேடு நேரும் என்று சொல்லவே இல்லை.
ஆனால் திருக்குறள் "ஒருவரை நம்புவது ஒரு சாதரண விஷயம் இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது" யாரையும் நம்புவதற்கும் முன்னர் "ஆராய்ந்து" நம்புதல் வேண்டும். "ஆராய்ந்து" என்பதிலும் திருக்குறள் நாலடியார் போலல்லாமல் நம்மை மிகவும் "தேர்ந்து தெளிதல் வேண்டும்" என்கிறது. அவ்வாறு "தேர்ந்து தெளிந்து" கண்டுகொண்ட ஒருவரை நாமே "சந்தேகித்தல்" என்பது யாருடைய குற்றம்?. அவ்வாறு நாம் சந்தேகித்தால் நமக்கு "கேடு" விழையும் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டோ? . திருக்குறள் இதில் நாலடியாரை விட மிக ஆழமான பார்வையைத் தருகிறது இல்லையா?.

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

1 comment:

Reemus Kumar said...

Good effort. Wish you good luck...

Keep posting atleast 1 Thirukural per week.