Wednesday, July 30, 2008

படித்ததால் பிடித்தது - நாலடியார் பாடல்

சமீபத்தில் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம் ஒன்றை புரட்ட நேர்ந்தது, எவ்வாறு தற்போதைய பாட புத்தகங்கள் உள்ளன என்ற ஆவல் முன்னேயுந்த புரட்டியதால் ஏற்பட்ட விளைவே இந்த பதிவு.
பாடல் (ஞாபகத்தில் உள்ள வரிகளே இங்கு , தவறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு )
நல்லார் எனத்தான் நனிசெய்து கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளால் வேண்டும்
நெல்லுக் குமியுண்டு நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்குமுண்டு
( யாரேனும் இப்பாடலுக்கு அர்த்தம் சொல்ல முயன்றால் நலமாய் இருக்குமே? இல்லையேல் நானே இந்த பதிவில் பின்னர் பதிவு செய்கிறேன்.)
பொருள் :
நல்லவர் என நாம் ஒருவரை நினைத்து அவருடன் நன்கு பழகி வரும்போது ஒரு சில நேரங்களில் அவர்களிடம் உள்ள சில கெட்ட பழக்கங்களைப் பார்க்க நேரிடலாம். அவ்வாறு நாம் காணக்கூடிய தருணங்களில் அவர்களை பற்றி நமது கருத்துக்களை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாக நினைத்து அவர்களை கெட்டவர்கள் எனப்புரிந்து கொள்ளலாம். ஆனால், நாம் அவ்வாறு நினைப்பதற்கு முன்பு பின்வருவனவற்றை நமது மனதில் இருத்தி நினைத்தோமேயானால் அவர்களை தவறாக நினைப்பதற்கு பதிலாக உலக நியதியை புரிந்து கொள்ள இயலும்.
நெல்லுக்கு இருக்கும் உமி போன்றும் ,நீருக்கு இருக்கும் நுரை போன்றும், பூவில் இருக்கும் வாசமில்லா இதழ் போன்றும், மனிதர்களிடமும் ஒரு சில குறை கண்டால் அதனை நாம் பொருத்துக்கொள்ளலே நலம்.

1 comment:

Deekshanya said...

good one.keep writing!