Tuesday, February 26, 2013

பாடல் - விழியில் விழுந்து


சிரி சிரி - சுட்டி குட்டீஸ்

பல நாள் கழித்து விழுந்து விழுந்து சிரித்து கண்ணில் இருந்து கண்ணீரே வந்து விட்டது........


Thursday, February 14, 2013

காதலர் தினம் - என் காதலே என் காதலே!!


படித்ததில் பிடித்தது - காதலர் உள்ளம்

சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்--கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
--ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்.

Friday, February 8, 2013

கேட்டதில் பிடித்தது - சஜ்தா (ஹிந்தி )



 படம் : மை நேம் இஸ் கான்
இசை : சங்கர் ஈசான் லாய்
பாடகர்கள் : ரஹத் ஃபதே அலி கான் , ரிச்சா சர்மா மற்றும் சங்கர் மகாதேவன்
எழுதியவர் : நிரஞ்சன் ஐயங்கார்.


பாடலின் தமிழ் மொழியாக்கம் கிடைத்தால் கொடுத்து உதவவும். நன்றி!!

Tuesday, February 5, 2013

கேட்டதில் பிடித்தது - இசையும் பாடல்வரிகளும்



கும்கி திரைப் படப்பாடல் ...இசையும், பாடல் வரிகளும் திரும்பத் திரும்ப கேட்டு மகிழுங்கள். :)

இன்னும் இனிமை காதல் செய்தால்....ஆதலால் காதல் செய்வீர்!!!

படித்ததில் பிடித்தது - உருது கஸல் பாடல் (தமிழில்)

’யா ரப் (இறைவனே)!

 நீ என்னை

நான் செய்த பாவங்களுக்காக

தண்டிக்க நினைத்தால்,

அந்தக் கணக்கில்,

நான் செய்ய நினைத்து செய்யாமல் விட்ட

எத்தனையோ பாவங்களைக்

கழித்துக்கொண்டு விடு’.

                   - மீர்ஸா காலிப்

-- குஷ்வந்த் சிங் இந்த கஸலை தனது புத்தகமொன்றில் மேற்கோள் காட்டியிருப்பதாக எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது “சினிமா சினிமா” புத்தகத்தில் (பக். 38, உயிர்மை வெளியீடு) குறிப்பிட்டுள்ளார்.

மனம் புதையா நினைவுகள் - தமிழ் காதல் கவிதைகள்

மனம் புதையா நினைவுகள்
---------------------------------------

பேசிய

பேச்சுக்களும்

உணர்ச்சியோடும்

உணர்வோடும்

உறவாடி

உரையாடிய

உரையாடல்களும்

கலந்திருக்கலாம் - இல்லை

கரைந்திருக்கலாம்

காற்றினிலே!!!



உடலொடு

உடல் மேவ

உரசியதும்

முகத்தோடு

முகம் தேய்த்து

முகர்ந்ததும்

தொட்டதும்

அணைத்ததும்

அனைத்தும்

உணர்வற்று

அணைந்திருக்கலாம்

உடலினிலே!!!


நெஞ்சோடு

நெஞ்சம்

கிளர்க்க

நினைவுகளில்

திளைத்தோம்

திகட்டா

இன்பமதில்

நெஞ்சினில்

நிதம் மோதும்

நினைவுகளை

புதைப்பதெங்கே - நீ

நிரம்பிய என்

மனதினிலா?