சித்தன்
----------
எண்ணங்களை சொல்
வண்ணங்களில்
வடித்திட உனை
வடித்திட்ட சிற்பியின்
கைவண்ணம்
கைக்கொள்ள வேண்டும்
வார்த்தைச் சித்தனாய்
மாறிடினும்
கனிந்திட்ட காதலளவு
காலமும் கனிந்தே
கைப்பட வேண்டும்
ஆகிடும் ஜென்ம காலம்
சொற்களாய் வடித்திட
இக்கணம் உதிக்கும்
எண்ணங்களை
காதல் தயை இருப்பினும்
காலமும் தூரமும்
நமை பிரித்து
கொடுங்கோளனாய்
கடும்வினை புரிந்திடுதே!!
Wednesday, July 16, 2014
Friday, July 11, 2014
ஓரிடத்தில் - தமிழ் காதல் கவிதைகள்
ஓரிடத்தில்
============
பார்த்தால் பரவிடும் பரவசமும்
தொட்டால் துளிர்விடும் இன்பமும்
கட்டினால் ததும்பிடும் தழுவழும்
கிட்டினால் கிளைத்திடும் கிளர்ச்சியும்
விட்டால் விடாத வேதனையும்
காதலும் காமமும்
ஆதலும் சாதலும்
ஓரிடத்தில் - உன்னிடத்தில் !!!
கடத்தல் - தமிழ் காதல் கவிதைகள்
கடத்தல்
===========
அனைத்தையும் எளிதில்
கடந்து போகும் என்னால்
உன்னை என்றும்
கடக்க இயலாது
எப்படி நானே
என்னைக் கடப்பது?
Subscribe to:
Posts (Atom)