சித்தன்
----------
எண்ணங்களை சொல்
வண்ணங்களில்
வடித்திட உனை
வடித்திட்ட சிற்பியின்
கைவண்ணம்
கைக்கொள்ள வேண்டும்
வார்த்தைச் சித்தனாய்
மாறிடினும்
கனிந்திட்ட காதலளவு
காலமும் கனிந்தே
கைப்பட வேண்டும்
ஆகிடும் ஜென்ம காலம்
சொற்களாய் வடித்திட
இக்கணம் உதிக்கும்
எண்ணங்களை
காதல் தயை இருப்பினும்
காலமும் தூரமும்
நமை பிரித்து
கொடுங்கோளனாய்
கடும்வினை புரிந்திடுதே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment