Thursday, October 27, 2011

Tamil kavithaigal

சந்தேகம்
========

சிறைவாசமிருந்து மீண்ட

சீதைக்கே சிதைமூட்டினான்

கண்டதும் காதலில் விழுந்த

அவள்தன் காதல் கணவன் !!!


பொம்பியா சீசரின்

நம்பிக்கைக்குரிய

மனைவிதான் இருப்பினும்

கிடைத்த பரிசு

அவளுக்கு என்னவோ?


புகைபோலிருப்பின்

தீ இருந்தே தீருமா?

இலவம் பஞ்சின் மேல்

கண் வைத்து

காத்திருக்கும் கிளி

இதில் இலவத்தின்

பங்குதான் என்னவோ?

Tamil kavithaigal

விடிவு
=======
நீண்ட நெடிய

வெறிச்சோடிய சாலையில்

இணையற்ற தனியொரு ஆளாய்!!

முடிவே இராதாவென

எண்ணி ஏங்கிட வைக்கும்

சிறு வெளிச்சக்கீற்றுமற்ற

கரிய இரவுகளின் தனிமையில் !!

முகமொன்றுமறியாத

நகரத்தின் திருவிழாக்

கூட்டமதில் தனியொருவனாய்

தவித்து இருக்கையில் !!!

நடுநிசி ஓநாயாய்

ஊளையிடும் மனம் !!

தனிமையின் சஞ்சாரத்தில்

மனம் லயிக்காமல்

உன் நினைவுகளில்

மூழ்கியதால் மூர்ச்சையாகிறது !!!


உடலும் மனமும்

வியாபித்திருக்கும் உன்

நினைவலைகள்

மோதி மோதி

உணர்வற்ற நிலையில்

உயிரற்ற சடலமாய்

இருக்குமெனக்கு உயிர்மழை

உனது தொடுதல் விமோசனமே !!