Thursday, December 17, 2015

எங்கே சென்றாய் நீ !!

என்னை அன்பு செய்கிறேன் 
இன்னும் அதிகமாய் நான் !!
நான்...
நான் மட்டுமல்ல
உணர்தலுக்கு பின்னர்..

எனது கோபங்கள், 
தாபங்கள்,
குறைகள், 
ஆதங்கம், 
எதிர்மறை எண்ணங்களை
எங்கே எடுத்துச் சென்றாய் நீ !!!
இங்கே என்னை மட்டும் 
விட்டு விட்டு....!!!
 

Saturday, October 17, 2015

மனம்

என்னை எல்லாம் கடந்து போகிறது...உன்னைத் தவிர...

தெளிந்த நீரோடையாய் மனம்.

முழுமை அடைந்த மனம் தெளிகிறது

இருவேறு கூறுகளற்ற ஒற்றைக்கூறாய் மனம்

ஒற்றைக் கொம்பில் தவம் செய்யும் குரங்காய் மனம்

நாயின் நிமிர்ந்த வாலாய் மனம்

தியானத்தின் மையப்புள்ளியில் நீ 

Saturday, October 10, 2015

நீ எங்கே??

கடலில் கலக்கும் நதி

கடல் இருக்க

நதி எங்கே?

உடலில் கலந்த உயிரின்

உடல் இருக்க

உயிர் எங்கே?

என்னில் கலந்த நீ

நான் இங்கிருக்க

 நதியே ! உயிரே !!

நீ எங்கே??