Showing posts with label வரையறை. Show all posts
Showing posts with label வரையறை. Show all posts

Thursday, January 31, 2013

மனது - தமிழ் காதல் கவிதைகள்

மனது
----------

வோடோபோன் நாய் போல்

உன் பின்னே செல்லும் மனதை

அடித்து அடக்கி

இழுத்து வந்து கட்டினாலும்

அடங்க மறுத்து

அத்துமீறுதே!!

என் செய்வேன்?

என் மனதை!!


உலகின் வரைமுறையும்

உள்ளத்தின் வரையறையும்

வகைதொகையின்றி அறிந்திருந்தும்

உடைத்தெறிந்து

உதறித் தள்ளி

ஓயாது ஓலமிடுதே!!

என் செய்வேன்?

என் மனதை!!