Sunday, January 16, 2011

Tamil kavithaigal

யாரடா நீ?
==========

ஒரு மழையும் ஒரு புயலும்
ஒன்று சேர ஏற்படுத்துகிறாய் !
எப்படி முடிகிறது உன்னால் மட்டும் ?
நல்லதும் தீயதும் ஒன்றே என்றும்
பொய்யும் உண்மையும் அழகுதான் என்றும்
நீ மட்டுமே சொல்கிறாய் !
மனிதர்களின் பார்வைகள்
கண்ணாடியின் வழியே தோன்றும்
காட்சி பிழைகளான பின்பங்கள் என
நன்றாக உணர்ந்தவன் நீ
அதனாலேயே அதை கல் எரிந்து
உடைதிடவும் உன்னால் மட்டுமே முடிகிறது !
கடவுள் காதல்,காமம்,பெண் எனும் பட்டியலில்
ஒவ்வொன்றுக்குமான உனது
விளக்கங்கள் பிரமிப்பாய் இருக்கிறது .....
பெண் உணர்வுகளின் கடைசி சொட்டு
ரத்தத்தையும் உறிந்துவிடும் ஆண்களுக்கிடையில்
என்னொரு சிறு உணர்வும் கூட
புண்பட்டு விடாது பார்த்துகொள்கிறாய்...
பயணத்தின் வலி நெடுகிலும்
நான் பார்க்கும் ஆண்கள் எல்லோரிடமும்
மனதுக்குள் ஓர் கேள்வியை கேட்கிறேன்
"நீங்கள் யாரும் ஏன் அவனை போல் இருக்கவில்லை " என்று
நான் கேட்கும் கேள்விகளுக்கு நடுவே
இப்போதும் ஒரு புன்னகை செய்வாய்
ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தங்களை
ஓர் புன்னகையில் உன்னால் மட்டுமே
உணர்த்திட முடியும் ......
எல்லோரும் உன்னால் என்னென்னவோ ஆகிறார்கள்
ஆனால், நீ , நீயாகவும் ,நீயே இந்த உலகமாகும்
உன்னால் மட்டுமே இருக்க முடியும் .....
எப்போதும் ...






நன்றி : மீனா...